search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஜா புயல் நிவாரணம்"

    கஜா புயல் நிவாரணமாக தமிழகத்துக்கு ஆயிரத்து 146 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. #GajaCyclone
    புதுடெல்லி;

    கஜா புயல் காரணமாக தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சுமார் 8 மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. கஜா புயல் நிவாரணமாக தமிழக அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. இடைக்கால நிவாரணமாக தமிழக அரசு 1500 கோடி ரூபாய் கேட்டிருந்தது.

    இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்நிலைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், சமீபத்தில் கஜா புயல் நிவாரணத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு ஆயிரத்து 146 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது மத்திய அரசு என தெரிவிக்கப்பட்டது.



    இந்த நிதி மத்திய பேரிடர் நிவாரண நிதி தொகுப்பில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே, மத்திய அரசு சார்பில் தமிழக அரசுக்கு 353.70 கோடி ரூபாய் நிவாரணமாக நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. #GajaCyclone
    நடிகர் ரஜினியால் அதிமுக-வின் ஓட்டுகள் பிரியாது, மற்ற கட்சிகளின் வாக்குகள்தான் பிரியும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #MinisterJayakumar #Rajinikanth
    சென்னை:

    அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரஜினியால் அதிமுக-வின் வாக்குகளை பிரிக்க முடியாது. திமுக, மற்ற கட்சிகளின் வாக்குகளை அவர் பிரிப்பார். ரஜினி தொலைக்காட்சி தொடங்கினால் திமுக-வுக்குத்தான் பாதிப்பு. கணினி தகவல்கள் கண்காணிப்பு என்பது கொலைகாரன் கையில் இருக்கும் கத்திபோல் மாறிவிடக்கூடாது.

    புயல் பாதிப்பை பார்வையிடாத பிரதமர், பிரசாரத்திற்கு மட்டும் தமிழகத்திற்கு வருகிறார் என்றால் இதற்கு பா.ஜனதாதான் பதில் சொல்ல வேண்டும். நாளைக்கே தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதுமான நிதி இருந்தும், தமிழகத்திற்கு கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு தரவில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. #GajaCycloneRelief #HCMaduraiBench
    மதுரை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மேலூரை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் உள்பட 3 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, கஜா புயல் பாதிப்பை பார்வையிட்ட மத்திய குழு, இறுதி அறிக்கையை எப்போது சமர்ப்பிக்கும்? என்று கேள்வி எழுப்பியது.

    இந்த வழக்குகள் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு கேட்ட கூடுதல் விவரங்கள் 16-ந் தேதியே கொடுக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, தமிழக அரசு அளித்த விவரங்கள் அடிப்படையில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கை பற்றி 19-ந் தேதி பதில் அளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசிடம் நிதியிருந்தும் கஜா புயல் நிவாரண நிதியை தரவில்லை என தமிழக அரசு சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதுமான நிதி இருந்தும் மத்திய அரசு தரவில்லை என தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

    மத்தியக் குழு அளிக்கும் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே தமிழகத்திற்கு நிதி வழங்க முடியும் என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இறுதி அறிக்கை தயாரிக்கவே தமிழக அரசிடம் சந்தேகங்கள் கேட்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

    இதையடுத்து எப்போது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்பது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். #GajaCycloneRelief #HCMaduraiBench
    கஜா புயல் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக போக்குவரத்துத்துறை ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். #GajaStorm #EdappadiPalanisamy
    சென்னை:

    சென்னை தலைமை செயலகத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று சந்தித்தார். அப்போது, கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தமிழ்நாடு அரசின் 8 போக்குவரத்து கழகங்கள் மற்றும் சாலை போக்குவரத்து நிறுவனங்களின் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத் தொகையான 13 கோடியே 15 லட்சத்து 23 ஆயிரத்து 395 ரூபாய்க்கான காசோலையை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார். இந்த சந்திப்பின் போது, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) ஹர்மந்தர் சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.



    இதே போன்று, அப்பல்லோ மருத்துவமனைகளின் செயல் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீதா ரெட்டி, அவரது கணவர் விஜயகுமார் ரெட்டி மற்றும் மகன் கார்த்திக் ரெட்டி ஆகியோரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 1 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினர். அப்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    மேலும், சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் செயலாளர் விக்ரந்த் யாதவ் மற்றும் அரசு தலைமை வக்கீல் விஜய் நாராயண் ஆகியோர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து 74 லட்சத்து 62 ஆயிரத்து 221 ரூபாய்க்கான காசோலையை சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் சார்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினர். அவர்களுடன் வக்கீல்கள் ஆர்.பாலசுப்பிரமணியா, சி.பரமசிவம், வினோத் கன்னா, சியாமளா ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

    ஆர்.எம்.கே. குழும கல்வி நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார். இந்த சந்திப்பின்போது, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ஆர்.எம்.கே. குழும கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் ஆர்.எம்.கிஷோர், செயலாளர் இளமஞ்சி பிரதீப் ஆகியோர் உடன் இருந்தனர். 
    கஜா புயலால் வீட்டை இழந்தவர்களில் 50 பேருக்கு வீடு கட்டித் தருவதாக லாரன்ஸ் அறிவித்துள்ள நிலையில், ரூ.10 லட்சம் செலவில் சமூக சேவகருக்கு வீடு கட்டி தருவதாக லாரன்ஸ் அறிவித்துள்ளார். #GajaCyclone #RaghavaLawrence
    நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கஜா புயலால் வீடு இழந்தவர்களில் 50 பேருக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டித்தரப்போவதாக அறிவித்தார். அதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

    முதல் கட்டமாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களை வைத்து ஒரு வயதான பெண்மணிக்கும், சமூக சேவகர் ஆலங்குடி கணேசனுக்கும் வீடு கட்டி தர இருக்கிறார். ஆலங்குடி கணேசனுக்கு 10 லட்ச ரூபாய் செலவில் லாரன்ஸ் கட்டித்தரும் வீட்டுக்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது.

    இதுகுறித்து ராகவா லாரன்ஸ் கூறியதாவது:-

    ஏழையின் இதயத்தில் இரக்கம் அதிகமாக இருக்கும் என்பார்கள். வாழ்ந்தாலும் உள்ளத்தால் உயர்ந்த இடத்தை எட்டிப் பிடித்தவர் ஆலங்குடி 515 கணேசன். அனாதையாக பிறந்தவர் யாரும் இல்லை.



    ஆனால் யாரும் அனாதையாக இறக்கக் கூடாது என்கிற உயர்ந்த சிந்தனையால் ஏறக்குறைய 500 அனாதை சடலங்களை அந்தந்த மத முறைப்படி ஈமக்கிரியை செய்து தகனம் மற்றும் அடக்கம் செய்தவர். இலவச ஆம்புலன்ஸ் சேவை மற்றும் யாருக்காவது ஏதாவது ஒன்று என்றால் ஓடோடி வந்து உதவி செய்பவர் கணேசன்.

    கேரள வெள்ள நிவாரணத்திற்கு மக்களிடம் நிதி திரட்டி அனுப்பி வைத்தவர் இவர். வீட்டையும் இரக்கமில்லாமல் கஜா காவு வாங்கி விட அதையும் பொருட்படுத்தாமல் கஜாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யப் போய்விட்டார்.

    எல்லா வசதிகளுடன் அவரை வாழ வைத்து பார்க்க வேண்டும். வீட்டுக்கு அவர் போனால் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று பாத்திரங்கள் கட்டில் பீரோ மின் விசிறி ஏ.சி. என்று வாழ வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவரை என் அப்பா இடத்தில் பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #RaghavaLawrence #GajaCyclone #GajaCycloneRelief

    கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள 50 பேருக்கு வீடுகட்டி தருவதாக கூறியுள்ள லாரன்ஸ், வீடுகட்டிய பின் புயல் பாதித்த விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவேன் என்றார். #RaghavaLawrence #GajaCyclone
    கஜா புயலால் வீடு இழந்தவர்களுக்கு 50 வீடுகள் கட்டி தருவதாக அறிவித்த லாரன்ஸ் அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். ஆலங்குடி பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட ராகவா லாரன்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    வளமாக வாழ்ந்தவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டு நிவாரணம் கிடைக்குமா என்று சாலையில் நிற்பது வேதனை அளிக்கிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு வீடு கட்டிக்கொடுக்க திட்டமிட்டுள்ளேன். அதன் ஒரு பகுதியாக சமூகசேவகர் கணேசன் இல்லத்துக்குச் சென்று அவரைப் பார்த்தேன். அவரிடம் பணத்தை கொடுக்கவில்லை.

    ஆனால், வீடு கட்ட திட்டம் வரையப்பட்டு வருகிறது. இதைப்பார்த்து பலரும் முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும். நான் வாழ்வது ரசிகர்கள் கொடுத்த பணத்தில்தான், தற்போது அவர்கள் துன்பமான நிலையில் இருக்கிறார்கள். என்னிடம் இருப்பதில் ஒரு பகுதியை அவர்களுக்குக் கொடுக்க நினைக்கிறேன்.



    அரசியலுக்கு வரத் தனித் தகுதிகள் வேண்டும் என்று நினைக்கிறேன். நான் படிக்கவில்லை. மேலும், அரசியலுக்கு வர என்னிடம் தகுதி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதனால், நான் அரசியலுக்கு வரமாட்டேன். நான் ஆன்மீகவாதி. அதனால், தற்போது அரசியலில் இருப்பவர்களுக்கு அந்தத் தகுதி உள்ளதா என்பதைப் பற்றி கூற விருப்பம் இல்லை.

    திரைப்படத்துறையில் இருப்பவர்கள் ஏதேனும் ஒரு வகையில் உதவிகள் செய்து கொண்டுதான் உள்ளனர். அடுத்தகட்டமாக மரக்கன்றுகள் வழங்க ஆலோசனை செய்கின்றேன். இந்தப் புயல் பாதிப்பால் விவசாயிகள் மனமுடைந்து விடாமல், மீண்டும் மரங்களை வளர்க்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #RaghavaLawrence #GajaCyclone #GajaCycloneRelief

    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கஜா புயல் நிவாரணத்திற்காக தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளார். #CycloneGaja #CycloneGajaRelief #TNGovernor #BanwarilalPurohit
    சென்னை:

    கஜா புயல் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களை புரட்டிப்போட்டது. லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலும் சேதமடைந்தது. குறிப்பாக மின்சார கம்பங்கள், துணைமின் நிலையங்கள், மின்மாற்றிகள் அதிக அளவில் சேதமடைந்தது.

    போர்க்கால அடிப்படையில் மறுசீரமைப்புப் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சேதம் என தமிழக அரசு கணக்கிட்டுள்ளது.


    அத்துடன் கஜா புயல் பாதிப்பிற்கு தாராளமாக நிவாரணம் வழங்கலாம் என்று முதல்வர் குறிப்பிட்டிருந்தார். அதிமுக மற்றும் திமுக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளித்தனர்.

    தனியார் நிறுவனங்களும், பிரமுகர்களும் நிவாரண நிதி அளித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். #CycloneGaja #CycloneGajaRelief #TNGovernor #BanwarilalPurohit
    தி.மு.க. பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கஜா புயல் நிவாரண நிதியாக தங்களது ஒரு மாத ஊதியத்தை அளித்துள்ளனர் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். #DMK #MKStalin #GajaCycloneRelief
    திருச்சி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க.வினர் நிவாரண உதவிகளை வழங்கவேண்டும் என்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    நிவாரண பொருட்களை சேகரித்து திருச்சியில் உள்ள தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமாறும் அவர் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திருச்சி கலைஞர் அறிவாலயத்திற்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.

    இன்று அதனை புயல் பாதித்த டெல்டா மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் நிவாரண பொருட்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

    இதில் ரூ.4 கோடி மதிப்புள்ள 400 டன் அரிசி, பருப்பு, ரவை, கோதுமை மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தேவையான பல்வேறு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக சென்று ஆய்வு செய்தேன். பாதிப்புகள் குறித்து அறிந்ததும் அவர்களுக்கு உதவுவதற்காக தி.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் சேகரித்து திருச்சி கலைஞர் அறிவாலயத்திற்கு அனுப்பி வைக்கும்படி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கேட்டுக்கொண்டேன்.

    அவர்களும் தேவையான நிவாரண பொருட்களை திருச்சிக்கு அனுப்பி வைத்தனர். சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இன்று அந்த பொருட்கள் அனைத்தும் புயல் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    இந்த பணியில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களுக்கு நன்றியும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்ட முதல் நாளே நான் அங்கு சென்று பார்வையிட்டு உதவிகளை செய்ய உத்தரவிட்டேன். ஆனால் முதல்வர் மக்களை உடனடியாக சந்திக்கவில்லை. 7 நாட்களுக்கு பிறகு ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.




    அதையும் பாதியிலேயே முடித்து விட்டு திரும்பி விட்டார். அமைச்சர்கள் அனைவரும் சாலை வழியாக செல்லும்போது முதல்வர் மட்டும் செல்லாதது ஏன்? எந்த மாநில முதல்வரும் தமிழக முதல்வர் போல் செய்தது இல்லை. இன்று பிரதமரை சந்தித்து பேசி இருக்கிறார். இதிலும் அவர் சரியாக செயல்படவில்லை.

    பிரதமரை சந்திப்பதற்கு முன்பு கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட் டங்களில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், அனைத்து தரப்பினரையும் அழைத்து ஆலோசனை செய்து முழுமையான விபரங்களை திரட்டிய பின்னரே சென்று பேசியிருக்க வேண்டும். அதே எதிர்க்கட்சியினரையும் அழைத்து ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும்.

    ரூ.15 ஆயிரம் கோடி நிவாரண நிதி கேட்டிருப்பதாக கூறுகிறார்கள். முதல் கட்டமாக ரூ.1,500 கோடி இடைக்கால நிவாரண நிதியாக வழங்கவேண்டும் என கேட்டிருக்கிறார்கள். இதையாவது அவர்கள் சரியாக செயல்பட்டு பெற்றுத்தர வேண்டும்.

    ஏற்கனே தானே, வர்தா, ஒக்கி ஆகிய புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு சரியான நிதியை தரவில்லை. தமிழக அரசு ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 573 கோடி நிதி கேட்டது. ஆனால் மத்திய அரசு அப்போது ரூ.2 ஆயிரத்து 12 கோடியை மட்டுமே வழங்கியது.

    இப்போது எந்த அளவிற்கு நிதியை வழங்குவார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மத்திய அரசு மத்திய கஜா புயல் பாதிப்பு குறித்து அறிந்த உடனேயே நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். மாநில அரசு அறிக்கை கொடுத்த பிறகுதான் நிதி வழங்கவேண்டும் என்று நினைப்பது சரியில்லை.

    இதற்கு முன்பு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்த போது இதுபோன்ற பேரிடர் காலங்களில் மத்திய அரசிடம் போதிய நிதியை பெற்றுத்தரவில்லை என்று கூறுவது தவறு. பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்க கூடாது. இப்படி கூறுவது போதிய நிதியை பெற்றுத்தர போவதில்லை என்பதை காட்டுகிறது.

    பா.ஜ..க.வுடன் அ.தி.மு.க. அரசு இணக்கமாக இருக்கும்போது, போதிய நிவாரண நிதியை பெற்றுத்தருவதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது? தி.மு.க. பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கஜா புயல் நிவாரண நிதியாக தங்களது ஒரு மாத ஊதியத்தை அளித்துள்ளனர்.

    நிவாரண பணிகளை மேற்கொள்ள அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #GajaCycloneRelief
    கஜா புயலுக்கு மத்திய அரசு தரும் தொகை, யானை பசிக்கு சோளப்பொறி போன்று தான் அமையும் என்று வைகோ தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko #GajaCyclone #CentralGovt
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சிக்கு வந்த ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ, இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சோழவள நாடு என்று பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்று, மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்து அவர்களை உயிரோடு சாகடித்து விட்டனர்.

    மேலும் தற்போது வீசிய கஜா புயலுக்கு 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகி உள்ளது. பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் அழிந்து விட்டது. வாழை, கரும்பு, பயிர்கள் போன்றவை நாசமாகி விட்டன.

    புயல் பாதிப்புகளுக்காக தமிழக அரசு உடனே ரூ.1000 கோடி ஒதுக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் பிரதமரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரண தொகையாக ரூ.13 ஆயிரம் கோடி கேட்க உள்ளார். ஆனால் இதில் 4 சதவீதம் கூட மத்திய அரசிடம் இருந்து வராது. அவர்கள் தரும் நிதி, யானை பசிக்கு சோளப் பொறி போன்று அமையும்.

    தமிழகத்தில் உள்ள அதிகாரிகள் இந்திய அளவில் சிறப்பாக செயல்படும் அதிகாரிகள் என்று பெயர் பெற்றவர்கள். அதை நிரூபித்து விட்டார்கள். அனைத்து மாவட்ட கலெக்டர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள். மேலும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் உதயகுமார் ஆகியோரை பாராட்டியே ஆக வேண்டும்.


    மின்வாரிய ஊழியர்கள், காவல் துறையினர் இரவு- பகல் பாராமல் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கஜா புயலில் அ.தி.மு.க. அரசு சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் முதல்வர் செய்த தவறு, புயல் வந்த 8 மணி நேரத்தில் களத்தில் நின்று பணியாற்றிருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை.

    தொடர்ந்து விவசாய கடன், கல்விக்கடன், வணிக கடன்களின் வட்டிகளை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். 5 ஆண்டுகளுக்கு பிறகே கடனை திரும்ப வசூல் செய்ய வேண்டும். மேலும் அரசு அளிக்கும் நிவாரண தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும்.

    தொடர்ந்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. மோடி பிரதமராக இருப்பதற்கே தகுதி இல்லாதவர் போன்று செயல்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko #GajaCyclone #CentralGovt
    ×